போர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – அரசாங்கம்!

போருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, எந்தவொரு சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்கவில்லையென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கையையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னர், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, ஐநா மனித உரிமைப் பேரவையில், சிறீலங்கா தொடர்பாக ஆராய்வதற்கு ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால், தற்போது மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து வெறும் 15 நிமிடங்களே சிறீலங்கா தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.முன்னர், சிறீலங்கா பொருளாதாரத் தடையை எதிர்நோக்கியிருந்தது. ஆனால் தற்போது நாங்கள் சரியான பாதையில் செல்வதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. போருடன் தொடர்புடைய விவகாரங்களுக்கு சொந்தத் திட்டங்களின் அடிப்படையில், தீர்வு காண்பதற்கு அனைத்துலக சமூகம் கால அவகாசம் அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.