இனம், ம‌தம், கட்சி அரசியல் கடந்து அனைவரும் எழுகதமிழில் திரள்க- பேரவை இணைத்தலைவர் ,முதலமைச்சர் கெளரவ . க.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

தொடர்ந்து வந்த பெரும்பான்மை இனம் சார்பான அரசாங்கங்கள் யாவும் ஒரே நிகழ்ச்சி நிரலிலேயே செயற்பட்டுவருகின்றனர். கட்சிகள் மாறினாலும் கரவான குடியேற்ற எண்ணங்களை எந்தப் பெரும்பான்மைக் கட்சியும் கண்டிக்கவில்லை; கடியவில்லை. மாறாகத் தாமும் சேர்ந்து வடகிழக்கு மாகாணங்களின் குடிப்பரம்பலைஇ மொழிப்பரம்பலை மாற்றவே செய்துள்ளார்கள். எனவே வடகிழக்கு இணைப்பு என்பது தமிழ்ப் பேசும் மக்கள் அனைவரதும் பாதுகாப்புக் கருதியே எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வடகிழக்கு இணைப்பொன்றே தமிழ்ப் பேசும் மக்கள் தொடர்ந்து தமது வாழ்விடங்களில் நிம்மதியாக வாழ வழிவகுக்கும். ஆகவே, இன , மத கட்சி பேதம் கடந்த தமிழ் பேசும் மக்கள் அனைவரினதும் ஒற்றுமையே , வடகிழக்கின் சிங்கள‌ மயமாக்கலை தடுத்து நிறுத்தும் .தமிழ்மொழிக்கும் அதைப் பேசும் மக்களுக்கும் தக்க ஏற்பினை வழங்க வேண்டும் என்று கேட்டே “எழுக தமிழ்” இம்மாதம் 10ந் திகதி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடலில் நடைபெற இருக்கின்றது. அதில் சகலரும் பங்குபற்ற வேண்டும் என்று கோரி எமது ஒற்றுமையினை உலகறியச் செய்ய இது ஒரு நல்ல தருணம் என்று கூறி வைக்கின்றேன், என் முதலமைச்சர் எழுக தமிழிற்காய் வெளியிட்ட அழைப்பில் கூறியுள்ளார்.

அனைத்து முற்போக்கு சக்திகளையும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொள்ளுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் அறைகூவல்

அரசியல் தீர்வு விடயத்திலும் , பொறுப்புக்கூறல் விடயத்திலும் , இந்த" நல்லாட்சி" அரசாங்கம் தனது வாக்குறுதிகளிலிருந்து விலகிவருகின்ற இந்த சூழலில் ,சனநாயக அணிதிரள்வின் மூலம் எமது நிலைப்பாடுகளை இலங்கை அரசிற்கும் சர்வதேச சமூகத்திற்கும் வெளிப்படுத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். எனவே, மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு இன வேறுபாடுகளையும் கட்சி வேறுபாடுகளையும் களைந்து அனைத்து முற்போக்கு சக்திகளும் ஆதரவு வழங்க வேண்டும் என தமிழ் சிவில் சமுக அமையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழுக தமிழ் ஏற்பாடுகள் பூர்த்தி, கல்லடிப்பாலத்திலிருந்து மணிக்கு காலை 9  மணிக்கு  பேரணி ஆரம்பம்: தமிழ் மக்கள் பேரவை இன்று பத்திரிகையாளர் மாநாடு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10ம் திககி) நடைபெற இருக்கும் எழுகதமிழிற்கான இறுதி ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. கல்லடிப்பாலத்திலிருந்து காலை 9 மணிக்கு பேரணி ஆரம்பமாகி நாவற்குடா விவேகானந்தர் மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்று எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்படும் என எழுகதமிழ் ஏற்பாட்டுக்குழுவினர் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர்.

ஒடுக்கப்படும் மக்களின் குரலாய் கிழக்கு எழுக தமிழில் அணிதிரளுங்கள்- தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

பொறுப்புக்கூறலிற்கும் நிரந்தர சமாதான முன்னெடுப்புகளுக்குமான, சிறிலங்காஅரசாங்கத்துக்கான கால அவகாசம் , ஜெனிவா மனித உரிமை பேரவையில் முடிவடைகின்ற இந்த தீர்க்கமான சந்தர்ப்பத்தை தவறவிடாது , எமது மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தொடரும் அடக்குமுறைகளையும் வெளியுலகிற்கு ஒரே குரலில் தெரியப்படுத்த , பெப்ரவரி 10ம் திகதி மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் எழுச்சிப்பேரணியில் அனைவரும் ஒன்றாக இணையுங்கள் என , தமிழ் மக்கள் பேரவை இன்று வெளியிட்ட அறிக்கையில் கோரியுள்ளது.

கிழக்கில் எழுகதமிழ்!

தமிழர் தேசம், அதன் தனித்துவமான இறைமை, அதன் சுய நிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் - தமிழ் பேசும் மக்களாகிய எமக்கே உரித்தான பிறப்புரிமைகளையும், எமது அரசியல் அபிலாசைகளையும் அங்கீகரிக்கத் தயாரில்லாத சிறீலங்கா ஆட்சியாளர்கள் - ஓற்றையாட்சி அரசமைப்பு ஒன்றைத் தமிழ் பேசும் மக்களாகிய எம் மீது திணித்து

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது தமிழ் மக்கள் பேரவை

தமிழ் மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பில் கிழக்கில் தை மாதம் நடக்க இருந்த எழுக தமிழ் நிகழ்வானது, தவிர்க்கமுடியாத சில காரணங்களால் பிற்போடப்பட்டு, பெப்ரவரி 10 ம் திகதி வெள்ளிக்கிழமை நடாட்டப்பட ஒருப்பதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.

தமிழ்மொழியின் வரலாறும் எதிர்கால இருப்பும்

சமூகக்கூா்ப்பில் உலகமயமாக்கலின் செல்வாக்கு, அதன் விளைவால் விரைவுபடுத்தப்பட்ட சமூக அரசியல் மாற்றங்கள் போன்றன பல சமூகங்களின் இருப்பினைக் கேள்விக்குறியாக்கி நிற்கும் இன்றைய நிலையில் இச்சமூகங்கள் தம் சுய அடையாளத்தினை நிலைநிறுத்தி இருப்பை உறுதிசெய்யும், செய்யவிளையும் நிலை உலகெங்கணும் காணப்படுகின்றது. இந்நிலை தமிழ்ச்சமூகத்திற்கும் பொருந்தும் எனினும் எந்த அளவு இந்நிலை பற்றிய விழிப்புணா்வு சமூகமட்டத்தில் உள்ளதென்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகும்.